புற்றுநோயை தடுக்கும் புராக்கோலி: BROCCOLI
புராக்கோலி என்ற மேலைநாட்டு காய்கறியானது இதயநோய் மற்றும் புற்றுநோய்களை குணப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.நார்விக்கில் உள்ள உணவு ஆராய்ச்சி மற்றும் ஜான் இன்ஸ் மையத்தினர் இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டு சூப்பர் புராக்கோலியை கண்டறிந்துள்ளனர்.
இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில் அதிகமாக விற்பனையாகும் புராக்கோலி, அங்கு மிகவும் விலை மலிவான காய்கறியாகும். முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த ப்ராக்கோலியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம், கால்சியம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகின்றன. எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு ப்ரூக்கோலி முக்கிய பங்காற்றுகிறது. இதில் உள்ள தாதுஉப்புக்கள் உயர்ரத்த அழுத்தம், மற்றும் புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது.
சூப்பர் புராக்கோலி:
நார்விக்கில் உள்ள உணவு ஆராய்ச்சி மற்றும் ஜான் இன்ஸ் மையத்தினர் ஆய்வு செய்து ஆரோக்கியத்துக்கு ஊக்கமளிக்கும் `குளூக்கோராபேனின்’ என்ற ஊட்டச்சத்தை மும்மடங்கு கொண்டுள்ள புதிய புராக்கோலியை உருவாக்கியுள்ளனர். இந்த `குளூக்கோராபேனின்’, இதயநோய் மற்றும் குடல், புராஸ்டேட் புற்றுநோய்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிரான தடுப்பாக அமையும் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.
புற்றுநோயை கட்டுப்படுத்தும்:
இது வழக்கமான புராக்கோலியைப் போலவே இருக்கும். ஆனால் இந்த சூப்பர் புராக்கோலி, மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளைக் குறைக்கிறது, புற்றுநோயின் ஆரம்பகட்டத்தில் காணப்படும் கட்டுப்பாடற்ற செல் பிரிதலை நிறுத்துகிறது, நோய்களை எதிர்த்துப் போராடும் `ஆன்டி ஆக்சிடன்ட்களை’ ஊக்குவிக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இதன்மூலம், நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் காய்கறிகளை மேலும் சத்து நிறைந்ததாக உருவாக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர் ஆய்வாளர்கள்.
_____________________________________________________________________________________________
செம்பருத்திப் பூ:
சிவந்த நிறமுடைய பூவே சிறந்த பலன் உடையது. இது வெப்பு அகற்றிக் காமம் பெருக்கும் செய்கையுடையது. கூந்தல் வளர்ச்சிக்கு மூலிகை ஷாம்பு தயார்செய்ய பயன்படுகிறது. இது கருப்பை கோளறுகள் உதிரப்போக்கு , இருதய நோய் ரத்தஅழுத்த நோய் குணமடையப் பயன்படும்.
அழலை, இரத்தபித்தம், தாகம்,பேதி, வயிற்றுக் கடுப்பு, விந்துவை நீற்றும், மேகம், விசுசி வேட்டை போகும். தேகவாரேக்கியம், விழியொளியும் உண்டாகும்.
செம்பையிலைக்கட்டி, ஜந்நி, தினவு, துடைவாழை, நீர்ரேற்றம், பிளவை, பீநாசங்கள், புண்புரை, மேகம், வாதகபம், விப்புருதி, விரணம், வீக்கம், வெடித்த புண், புரைகளும் போகும்.
பூவை நீரிட்டுக்காச்சி வடிகட்டிப்பாலும் சர்கரையும் சேர்த்து காலை மாலை பருக மார்புவலி, இதய பலவீனம் தீரும். காப்பி, டீ புகையிலை நீக்க வேண்டும்.
பூவை உலர்த்திப் பொடித்துச் சம எடை மருதம் பட்டைத்தூள் கலந்து பாலில் காலை மாலை பருக இதயபலவீனம் தீரும்.
பூவை நல்லெண்ணையில் காச்சி தடவ முடி வளரும். செம்பரத்தை வேர்ப்பட்டை, இலைந்தை மரப்பட்டை மாதுளம் பட்டை சம அளவு சூரணம் செய்து 4 சிட்டிகை காலை மாலை சாப்பிட பெரும் பாடு தீரும்.
பூ 500 கிராம் அம்மியில் நெகிழ அரைத்து அதில் ஒரு கிலோ சர்க்கரையைப் போதிய நீர்விட்டுக் கரைத்து வடிகட்டிக்கலந்து
சிறுதீயில் எரித்து குழம்புப் பதமாக்கி (செம்பரத்தை மண்ப்பாகு) வைத்துக்கொண்டு 15 மி.லி.யாகக் காலை மாலை சாப்பிட்டு வர உட் சூடு, நீரெருச்சல், உள்ளுறுப்புகளில் உள்ள புண், ஈரல் வீக்கம், நீர்கட்டு ஆகியவை தீரும்.
இந்தப்பூவின் கசாயத்துடன் மான் கொம்பு பற்பம் ஒரு கிராம் அளவு சேர்த்து 10-20 நாள் சாப்பிட இதயத்துடிப்பு ஒழுங்கு படும். படபடப்பு
இருக்காது. குருதி தூய்மையாகும். குருதி மிகுதியாக உற்பத்தியாகும். பாரிச வாய்வும் குணமாகும். இதன் மகரந்தக் காம்பு உலர்திய தூள் 5 கிராம் பாலில் சாப்பிட மலடு நீங்கும்.
தஙகச்சத்து இப்பூவில் இருப்பதால் தாதுவிருத்திக்கு மிகவும் சிறந்ததாகும். நாளும் 10 பூவினை மென்று தின்று பால்அருந்தினால் நாற்பது நாளில் தாதுவிருத்தி ஏற்படும். நீர்த்துப்போன விந்து கெட்டி
படும், ஆண்மை எழுச்சி பெறும். உலர்த்திய பூசூரணத்துடன் முருங்கைப்பூ அல்லது விதை உலர்த்திய தூளும் சேர்த்துச்சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.இன்பம் நீடிக்கும்.
_______________________________________________________________________________________________
ஆரோக்கிய வாழ்வுக்கு சில குறிப்புகள்:
* முள்ளங்கி சாப்பிட்டால் வாதம் குணமாகும். முள்ளங்கி இருமல், கபம், குடல் நோய்களுக்கும் சிறந்தது.
* இரவில் தூங்க அடம் பிடிக்கும் குழந்தைக்கு படுக்கும் முன் சிறிது தேன் கொடுத்தால் அசந்து தூங்கும்.
* கருவேப்பிலை, மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடித்து சாப்பிட்டால் வெயில் காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் சரியாகும்.
* 5 கிராம்பு. கொஞ்சம் சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உஷ்ண தலைவலி குறையும்.
* சீரகத்தை தண்ணீரில் கொதிக்க விட்டு ஆறியதும் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
* இஞ்சி, கொத்தமல்லித் தழையுடன் எலுமிச்சைச் சாறு கலந்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நன்கு பசி எடுக்கும்.
* அன்னாசிப்பழத்தை நறுக்கி தேனில் ஊற வைத்து அந்தத் தேனை இரண்டு வாரம் குடித்தால் கல்லீரல் ஆரோக்கியமாகும்.
* இதய மாற்று அறுவைச்சிகிச்சை செய்தவர்களுக்கு மஞ்சள் தூள் அருமருந்தாகும். இது இதயத்தில் ரத்த ஒட்டத்தை அதிகரிக்கும். திசுக்களின் சேதத்தையும் சரிப்படுத்தும்.
_______________________________________________________________________________________________
பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்...
பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.
பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது; உணவை செரிப்பிக்கிறது ; சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது ; பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும்.
உபயோகங்கள் : இது ஒரு நல்ல வாய்வகற்றி; உணவுப் பொருள்களைச் சீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது. இது, வழக்கமான அதாவது எப்போதும் உள்ள இருமலுக்கு கோழையகற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும்,
நீரேற்றத்தையும் - சவ்வுகளின் வீக்கத்தையும், காசத்தையும் நீக்குகிறது. சுவாச நோயில் இசிவகற்றியாகவும், வயிற்றில் ஏற்படும் பாதிப்புகட்கும், குடற் கிருமிகளை வெளிப்படுத்தவும் பயனுடையதாகிறது.
இது, குடலின் உப்புதலை குறைக்கிறது. இதன் சிறப்புச் செய்கையினால் வலி உள்ள மாத விடாயின்போது தீட்டை அதிகமாக்குவதற்காகக் கொடுக்கப்படுகிறது.
நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மூர்ச்சை நோயிலும், வலிப்பு நோயிலும், இது சம்பந்தமான நரம்புக் கோளாறுகளிலும் மிகவும் பயனுடையதாகிறது.
பிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற கொடுக்கப்படுகிறது. இதை ( பெருங்காயத்தை ) எண்ணெயில் கரைய வைத்துக் காயங்கட்கு மேலே பூசுவதற்கும், காது நோய்களில் பழக்கமான நேர் மருந்தாகக் காது வலியைக் குறைக்க பயன்படுகிறது.
இதைப் பொரித்து உபயோகப்படுத்தலே நலம். பச்சையாக உபயோகித்தால் வாந்தியுண்டாகும்.
இதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகட்கு உண்டாகும் கக்குவான் குணப்படும்.
பிரசவத்தின் பின், அழுக்கை வெளிப்படுத்தக் காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துக் காலையில் கொடுக்கலாம்..
__________________________________________________________________________________