'KIDNEY INFORMATION
மனித உடலில் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது சிறுநீரகம் என்ற கிட்னி. பல நேரங்களில் சினிமா கதாபாத்திரங்கள் அவசரச் செலவுக்கு இரு கிட்னிகளில் ஒன்றை விற்பதை பார்க்கலாம்.
உலக மக்களிடையே சிறு நீரகத்தின் செயல்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டு தோறும் சர்வதேச சிறுநீரக தினம் ( World Kidney Day, March 13) மார்ச் 13 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
உடலில் எந்த உறுப்பில் கோளாறு ஏற்பட்டாலும் அதை சரி செய்துவிடலாம். ஆனால், சிறு நீரகத்தில் கோளாறு என்ரால் அதை சரி செய்ய முடியாது. வேறு சிறுநீரகத்தை மாற்றுவதை தவிர வேறு வழியில்லை. இதிலும், ஆரம்ப நிலையில் கவனித்து விடுவது நல்லது. பாதிப்பு முற்றிவிட்டால் மாற்று சிறுநீரகம் கூட பொருத்துவது கடினம்தான்.
நமது உடலில் கழிவுகளை வெளியேற்றுவது சிறுநீரகம்தான். இது பாதிக்கப்பட்டால் உடலில் கழிவுநீர் தேங்கிவிடும்.
உணவு பழக்கம் தான் சிறுநீரகக் கோளாறுக்கு காரணம் என்றாலும் பரம்பரை நோய் காரணமாக இருக்கிறது.
பொதுவாக, கிருமி பாதிப்பு, விபத்தால் சிறுநீரகம் பாதிப்பு, சிறுநீரக அடைப்பு, சிறுநீரக புற்றுநோய் போன்றவற்றால் இந்த பாதிப்பு வருகிறது. அடுத்து மிக முக்கியமானது, நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு இரண்டும் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கிறது. இந்த நோய்கள் உள்ளவர்கள் சிறுநீரகங்களின் செயல்பாட்டை சோதித்துக் கொள்வது நல்லது.
சிறுநீரகத்தில் கற்கள் சேர்ந்தால் வயிற்று வலி ஏற்படும். இது உணவு மற்றும் குடிக்கும் தண்ணீர் போன்றவற்றால் ஏற்படுகிறது. இந்தச் சிறுநீரக கற்களை அறுவை சிகிச்சை இல்லாமல் கரைக்கும் மருத்துவச் சிகிச்சை இருக்கிறது.
சிறுநீரகம், மனித உடலில் நீர் சமநிலையை காப்பாற்றி வளர்சிதை மாற்றக் கழிவுகளை வெளியேற்றும் ஜோடி உறுப்பு.
மனித சிறுநீரகங்கள் அவரை விதை வடிவத்தில் சுமார் 10 செ.மீ. நீளத்தில் அமைந்துள்ளன. இவை ஒவ்வொரு 45 நிமிடமும் ரத்தத்திலுள்ள சுமார் 4.5 லிட்டர் தண்ணீரை வடிகட்டுகின்றன. குளுக்கோஸ், கனிமப் பொருட்கள், தண்ணீர் போன்றவற்றை மீள் உறிஞ்சல் மூலம் ரத்தத்துக்கு திருப்புகின்றன. மீதமுள்ள திரவமும், கழிவுகளும் சிறுநீராக வெளியேற்றப்படுகிறது. கிட்னி ஒன்றில் 10 லட்சத்துக்கும் மேலான நெஃப்ரான்ஸ் என்னும் ரத்தக் குழாய்கள் வடிகட்டுதல் மற்றும் மீள் உறிஞ்சல் பணியை மேற்கொள்கின்றன.
சிறுநீரகத்தின் இயக்கத்தில் தொய்வு ஏற்பட்டால் சிக்கல்தான். அதாவது உடலிலிருந்து சிறுநீர் வெளியேறும் அளவு குறைந்துவிடும் அல்லது வெளியேறுவது முற்றிலும் நின்று விடும். கூடவே, ரத்தத்தில் ரசாயனப் பொருள் சமநிலை சீர்கெட்டு, யூரியாவின் அளவு அதிகரிக்கும். ரத்தத்தில் அமிலத் தன்மை அதிகரிக்கும். எலும்புகள் கால்சியத்தை இழக்கின்றன. மேலும், நரம்புகள் சீர் கெடுகின்றன. சுமார் 90% செயல் இழக்கும் வரை சீறு நீரகங்கள் வாழ்க்கையை நீடிக்க செய்கிறது. சிறு நீரகங்களில் ஒன்றை நீக்கி விட்டால், மற்றொன்று அளவில் பெரிதாகி மற்றொன்றின் பணியையும் சேர்த்து செய்கிறது. இரண்டும் செயல் இழந்தால் டயாலிஸிஸ் அல்லது சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும்.
70 விழுக்காடு பழுதுபட்டாலும் 30 விழுக்காடு நுண் குழாய்கள் கூடுதல் சுமையோடு பணியாற்றக்கூடியது சிறுநீரகங்கள். அந்த 70 விழுக்காடும் பழுது ஏற்படாமல் பாதுகாப்பதே இன்று முக்கிய அவசர, அவசிய பணியாக உள்ளது.
தினமும் உடலில் உண்டாகும் நச்சுப்பொருட்களை வடிகட்டி கழிவுகளை சிறுநீரில் அனுப்பும் முக்கிய பணியை சிறுநீரகம் செய்து கொண்டிருக்கிறது. பொதுவாக மனிதர்களுக்கு இரண்டு சிறுநீரகம் உண்டு. அபூர்வமாக சிலருக்கு இயற்கையிலோ அல்லது சூழ்நிலையின் காரணமாகவோ ஒரு சிறுநீரகம் அமைந்து விடுவதுண்டு.
நிஜத்தில் ஒரே ஒரு சிறுநீரகத்துடன் பிறந்த பெரும்பாலானவர்கள் அவர்களுக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே உண்டு என்பதை அறியாமலேயே தங்கள் முழு வாழ்வையும் வாழ்ந்து முடித்து விடுகின்றனர். இதில் சிலரே எதேச்சையாக வேறு காரணங்களுக்காக பரிசோதிக்கப்படும் போது அவர்களுக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே உள்ளது என்பதை அறிகின்றனர். இனி ஒரு சிறுநீரகத்துடன் தன் வாழ்நாளை வாழ வேண்டியுள்ளது குறித்து அவர்களுக்கு பல கவலைகள் இருக்கலாம். இக்கட்டுரை இந்த சந்தேகங்களுக்கு விடையளிக்கும்.
ஆயிரத்தில் ஒருவருக்கு பிறக்கும் போதே ஒரே ஒரு சிறுநீரகத்துடன் மட்டுமே பிறக்க வாய்ப்பு உண்டு. பலருக்கு இதனால எந்த தொந்திரவும் இல்லாமல் வேறு காரணங்களுக்காக மருத்துவமனையில் வயிற்றுக்கு ஸ்கேன் செய்யும் போது எதேச்சையாக கண்டுபிடிக்கப்படுவது உண்டு. சிலருக்கு சிறுநீரகத்தில் கட்டி அல்லது சிறுநீரகக் குழாயில் கல், மற்ற காரணங்களால் அடைப்பு கிருமித் தாக்கம், விபத்தில் சிறுநீரகம் சிதைவு ஆகிய காரணங்களால் ஒரு சிறுநீரகத்தை அறுவை சிகிச்சையில் அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம்.
தங்கள் உறவினர் அல்லது நண்பர்களுக்கு, அவர்களின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தால் தங்களின் இரண்டு சிறுநீரகங்களில் ஒரு சிறுநீரகத்தைத் தானமாக தந்தவர்களும் உண்டு. இரண்டு சிறுநீரகங்களும் நன்கு ஆரோக்கியமாக இயங்கும் ஒரு நபர் ஒன்றை இன்னொருவர் உயிர் காக்க தானமாக தந்த பிறகு அவர்களுடைய மற்ற சிறுநீரகம் அவரது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் நன்கு இயங்கி அவரை ஆரோக்யமாகவே வைத்திருக்கின்றது. உண்மையில் ஒரு ஆய்வு சிறுநீரக தானம் கொடுத்தவர்கள் அவரது வயதொத்தவர்களை விட அதிக காலம் உயிர் வாழ்வதாக சொல்கின்றது.
இப்படிப்பட்டவர்களில் மிகச்சிலருக்கு 10-15 வருடங்களுக்கு பிறகு உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரத ஒழுக்கு ஆகிய சில சிறிய எளிதில் சிகிச்சை அளிக்கக் கூடிய தொந்திரவுகள் வரலாம். ஒரு சிறுநீரகம் மட்டுமே உள்ளதாக சிறுவயதிலேயோ பின்னாளிலோ கண்டுபிடிக்கப்பட்டவர்கள் ஒரு சிறுநீரக மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அவர் இந்த ஒரு சிறுநீரகத்தின் முழு ஆரோக்யத்தை எளிய பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வார். சிறுநீரகம் நன்றாகவே இருந்தாலும் முறையான இடைவெளிகளில் (6வருடம் ஒரு முறை) தொடர்ந்து சிறுநீரக மருத்துவரை கலந்து கொள்வது சிறந்தது. இது சிறுநீரக தானம் கொடுத்தவர்களுக்கும் வேறு காரணங்களுக்காக ஒரு சிறுநீரகத்தை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற வேண்டி வந்தவர்களுக்கும் பொருந்தும்.
அபூர்வமாக ஒற்றை சிறுநீரகத்தில் பாதிப்பு ஏதும் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டால் சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும். ஒற்றை சிறுநீரகம் ஆரோக்யமாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களுக்கு உணவிலோ, மற்ற பழக்க வழக்கங்களிலோ எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை. குழந்தை பெறுவதிலும் எந்த சிக்கலும் கிடையாது.
அந்தத் தலையாய பணியின் ஒருபகுதியாக மக்களிடையே சிறுநீரகம் குறித்த மருத்துவ விழிப்புணர்வினை ஏற்படுத்தவே மார்ச் 11-ம் நாள் உலக சிறுநீரக நாள் என்று அறிவிக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது.
சிறுநீரகம் என்றால் என்ன?
1. நம் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்று.
2. உலகின் மிகச்சிறந்த - மிக நுண்ணிய சுத்திகரிப்பு உபகரணம்.
3. கருவி¢ல் நான்காவது மாதத்திலிருந்து துவங்கி மனிதனின் மரணம் வரை இடைவிடாது தொடர்ந்து இயங்குகின்ற உறுப்பு.
4. வயிற்றின் பின் பகுதி-விலா எலும்பிற்குக் கீழே பக்கத்திற்கு ஒன்றாக அவரை விதை வடிவில் சிறுநீரகங்கள் இரண்டு உள்ளது.
செயல்பாடுகள்:
1. இதயத்திலிருந்து வெளிப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சென்று சுத்திகரிக்கப்படுகின்றது. நாள் ஒன்றுக்கு 200 லிட்டர் கழிவுநீர் வடிகட்டப்பட்டு சராசரியாக 1.5 லிருந்து 2 லிட்டர் சிறுநீரக வெளியேற்றப்படுகிறது.
2. உடலில் உள்ள கழிவுப் பொருட்களை மூத்திரமாக வெளியேற்றுவது ஒன்று மட்டுமே சிறுநீரகங்களின் செயல் அல்ல.
3. உடலில் பிற உறுப்புகள் முறையாக செயலாற்றக் கூடிய அகச்சூழலை உருவாக்குவது.
4. உடலின் திரவநிலையை சமநிலையில் பராமரிப்பதும்,
5. இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருப்பதும்.
6. இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான எரித்ரோபாய்டின் என்ற சுரப்பினை சுரப்பதும்,
7. எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சம அளவில் வைத்திருக்கக்கூடிய வைட்டமின் டி3 யைத்தருவதும்.
8. அமில, காரத்தன்மைகளையும், சோடியம், பொட்டாசியம், அம்மோனியா போன்றவைகளை சரிவிகிதத்தில் வைத்திருப்பதுமான செயல்பாடுகளை செய்வதும் சிறுநீரகங்கள்தான்.
சிறு நீரங்கள் செயல்படவில்லை எனில்
1. இரத்த அசுத்தமாகும்.
2. இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படும்.
3. தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் தேவையற்ற வேதிப்பொருட்களின் சமநிலையில் பாதிப்பேற்பட்டு உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும்.
4. இதன் விளைவாக மூச்சுத்திணறல், நினைவிழத்தல், இரத்தக்கொதிப்பு உண்டாகி சிறுந¦ரகங்கள் செயலிழந்து இறுதியில் மரணமேற்படும்.
சிறுநீரக செயலிழப்பு என்றால் என்ன? அறிகுறிகள், காரணங்கள்:
கிட்னி பாதிப்பால் உலகில் ஆண்டுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் இறக்கின்றனர்
சிறுநீரக செயல்திறன் குறைகின்ற போது நமது உடலிருந்து வெளியேற்றப்படுகின்ற கழிவுப் பொருட்களான யூரியா, கிரியாடினின் மற்றும் பிற தாதுப் பொருட்கள் இரத்தத்தில் கலந்து விடுவதால், சிறுநீர் சரிவர பிரியாத நிலை மூச்சுத்திணறல், அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம¢, கைநடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல்வறண்டு அரிப்பு, இரத்தசோகை ஏற்பட்டு இதயம், மூளை, நுரையீரல்கள் பாதிக்கப்படுகின்றன.
உடன் வரும் சிறுநீரக செயலிழப்பு, நாளடைவில் வரும் சிறுநீரக செயலிழப்பு என்று இரண்டாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. நீண்டநாள் இரத்தக்கொதிப்பு, நீண்டநாள் நீரிழிவு, பரம்பரை குடும்பவழி மரபணுக்கள் பாதிப்பு, நாட்பட்ட சிறுநீர்குழாய் அடைப்பு, வலிநிவாரணிகளையும், இரசாயன பொருட்களையும் தொடர்ந்து சாப்பிடுவது, சிறுநீரக இரத்தக்குழாய்களில் ஏற்படும் ஒவ்வாமை போன்றவற்றால் ஏற்படுவது நாளடைவில் வரும் சிறுநீரக செயலிழப்பாகும்.
பாம்புக்கடி, கதண்டுவண்டுகடி, மலேரியா கொசுக்கடி, லெப்டோ பைரோசிஸ் என்ற உயிர்கொல்லி, வயிற்றுப் போக்கு, பிரசவகாலங்களில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு, கருக்கலைப்பின்போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு, வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்வது போன்ற காரணங்களால் ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு உடன்வரும் சிறுநீரக செயலிழப்பு எனப்படுகிறது.
இந்தப்பாதிப்பிலிருந்து பாதுகாக்க இரத்தத்தில் கலந்துவிட்ட கழிவுப் பொருட்களை சுத்திகரித்து நீக்க வேண்டும். அப்படிப் பிரித்து நீக்குவதைத் தான் டயாலிசிஸ் என்று சொல்கின்றோம்.
இது வியாதியின் தன்மையினைப் பொருத்து சிலருக்கு சில நாட்கள் அல்லது சிலவாரங்கள் தேவைப்படும். அதுபோன்றே சிலருக்கு வாழ்நாள் முழுமைக்கும் அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை வரைக்கும் தேவைப்படும்.
டயாலிசிஸ் இரண்டு வகைப்படும். அவை ஹீமோ டயாலிசிஸ், பெரிடோனியல் டயாலிசிஸ்.
ஹீமோ டயாலிசிஸ்:
இது உடலுக்கு வெளியே செயற்கை சிறுநீரகமாக ஒரு இயந்திரம் செயல்பட்டு இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
நோயாளியின் கையில் பிஸ்டுலா என்ற சிறு அறுவை சிகிச்சையின் மூலம் இரத்தக்குழாய்கள் இணைக்கப்பட்டு, இணைக்கப்பட்ட இரத்தக்குழாய் 3 அல்லது 4 வாரங்களில் வளர்ச்சியடைந்து டயாலிசிஸ் செய்ய ஏற்றவாறு செய்யப்படுகிறது.
நோயாளிக்கு இரத்தத்தில் யூரியா, கிரியாடினின் அளவு அதிகரித்து மூச்சுத்திணறல், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்ற போது பிஸ்டுலா வழியாக டயாலிசிஸ் செய்யப்படும்.
நோயாளி துவக்ககாலத்தில் மருத்துவரை அணுகாமல் நாட்கள் கடந்துவந்தால் கைகளி¢ல் செய்யப்படுகின்ற அறுவை சிகிச்சைக்கு பதிலாக கழுத்திலோ, நெஞ்சிலோ அல்லது தொடையிலோ சிறிய குழாயினை செலுத்தி இரத்தத்தினை சுத்திகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறு செய்தால் குழாயினை அதே இடத்தில் அதிக நாட்கள் வைத்துக் கொள்ள இயலாது எனவே, கையில் பிஸ்டுலா செய்துகொள்வதே சிறந்தது.
பெரிடோனியல் டயாலிசிஸ்;
இதில் நோயாளியின் வயிற்றில் துளையி¢ட்டு ஒரு குழாயினை செருகி, அந்த இரப்பர் குழாய் மூலமாக வயிற்றுக்குள் திரவத்தினை செலுத்தி 4 அல்லது 5 மணி நேரத்திற்குப் பிறகு அத்திரவத்தினை வெளியேற்ற வேண்டும்.
இப்படியான முறையி¢ல் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை செய்ய வேண்டும். இப்படி செய்கின்ற போது இரத்தத்தில் அதிகரித்துள்ள யூரியா, கிரியாட்டினின் வெளியேற்றப் படுகின்றது.
இதை நோயாளியே மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவ உதவியாளிரின் பார்வையில் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.
இதயம் பலகீனமானார்கள், வயாதானோர்கள், நீரிழிவு நோயினால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்முறை ஏற்றதாகும்.
இதைச் செய்து கொள்கின்றபோது கிருமித்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுதல் அவசியம். இதற்கு தொடர் ஆம்புலேட்டரி பெரிட்டோனியல் டயாலிசிஸ் என்று பெயர்.
இந்த இரண்டு முறையில் எது நோயாளிக்கு ஏற்றது என்பது மருத்துவரின் ஆலோசனை மற்றும் நோயாளின் குடும்பச் சூழல், பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொருத்து.
டயாலிசிஸ் செய்து கொண்டால் பூரண குணமாகிவிடும் என்று நினைப்பது தவறு!
சிறுநீரகப் பாதிப்பின் தன்மையைப் பொருத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைத் தேவையெனில் அதுவரை டயலிசிஸ் செய்து கொள்ள வேண்டும். அதுபோலவே சிறுநீரக தானம் தரயாரும் முன்வராத நிலையில் ஆயுள் முழுக்க டயாலிசிஸ் செய்து கொள்ளத்தான் வேண்டும்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை:
பழுதடைந்துவிட்ட சிறுநீரகத்தினை எடுத்துவிட்டு அந்த இடத்தில் வைப்பதில்லை பெறப்பட்ட சிறுநீரகத்தினை வயிற்றுப் பகுதியின் வலப்பக்கத்தில் பொருத்துவது.
யாரிடமிருந்து சிறுநீரகம் பெறலாம்:
நெருங்கிய இரத்த உறவுளள உறவினர்களிடமிருந்து விபத்தில் அல்லது வேறு காரணங்களால் நினைவிழந்து மூளை இறப்பு ஏற்பட்டுள்ள வரிடமிருந்தோ அல்லது எல்லாவிதமான பரிசோதனைகளிலும் பொருந்திவரக்கூடிய தானமளிப்பவரிடமிருந்தோ பெற்றுக்கொள்ளலாம்.
கொடுப்பவர் யாராக இருந்தாலும் அவரின் மனப்பூர்வமாக சம்மதத்துடன் உறுப்பு மாற்று நோயாளிகளின் சட்டத்திற்குட்பட்டுத்தான் பெற முடியும்.
அதுபோலவே சிறுநீரகத்தினை தானமாகக் கொடுப்பவரிடமிருந்து கூட உடனே எடுத்து விடமுடியாது. தானமாக பெறுபவரின் உடல் தானமாக கொடுப்பவரின் சிறுநீரகத்தினை ஏற்றுக்கொள்ளுமா என்பதை அறிய பல்வேறு நுண்ணியசோதனைகளை நடத்த வேண்டும். மாற்று அறுவை சிகிச்சை சற்றேக்குறைய 3 லிருந்து 4 மணி நேரம் நடைபெறும¢ பெற்றுக் கொள்பவருக்கும் கொடுப்பவருக்கும் எல்லாம் பொருத்தி மாற்று அறுவைசிக்சை செய்து கொண்டாலும் தொடர்ந்து மருத்துவக்கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
ஏனெனில் நமது உடலில் மாற்றத்தினை ஏற்றுக்கொள்ளாத அணுக்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தி பொருத்தப்பட்ட சிறுநீரகத்தினையும் பழுதடையச் செய்துவிடும். சிகிச்சைக்கும் பிறகு மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்காக ஆகக் கூடிய செலவு பெரிய பொருளாதார சுமையினை ஏற்படுத்தக் கூடியது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே சிறுநீரக செயலிழப்பிலிருந்து நம்மைபாதுகாத்து கொள்ள மருத்துவ விழிப்புணர்வு மிகவும் தேவை.
எளிய உடற்பயிற்சி புகையினையும், மதுவினையும் தவிர்ப்பது-தொடர்ந்து வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்வது- அமிலத்தன்மை வாய்ந்த தாதுப் பொருட்களடங்கிய லேகியம் போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்ப்பது- அதிக கொழுப்பு, அதிகப்புரதம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்த்து மருத்துவரின் ஆலோசனைப்படி உணவுகட்டுப்பாடு - குறிப்பிட்ட இடைவெளிவிட்டு மருத்துவரின் அறிவுரைப்படி பரிசோதனை மேற்கொள்வது நீரிழிவு, இரத்தக்கொதிப்பு போன்ற பாதிப்புள்ளவர்கள் அதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றின் மூலம் நாம் நம்மை காத்துக்கொள்வதுடன் பொருளாதார இழப்பினையும் தவிர்க்கலாம். எனவே சிறுநீரகம் காப்போம் சீரிய வாழ்வு பெறுவோம்.
கவனத்திற்கு:
1. ஒரே மாதிரியான நோயினால், ஒரே மாதிரியான காரணங்களால் எல்லோருக்கும் ஒன்று போலவே சிறுநீரகங்கள் பாதிக்கப் படுவதில்லை. எனவே அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பிற நோயாளிகளிடமோ அல்லது உறவினர்களிடமோ கேட்காதீர்கள்.
2. உங்கள் நோயைப் பற்றிய எந்த சந்தேகங்களையும் - எவ்வளவு கேள்விகளையும் உங்கள் மருத்துவரிடமே நேரிடையாகக் கேட்டுத் தெளிவுபெறுங்கள்.
3. நோயாளியோ, அவரது உறவினர்களோ அல்லது நோயாளி உடன் இருப்பவரோ நோய் பற்றி முழுமையாக மருத்துவரிடமோ அல்லது அவரின் உதவியாளர்கள் மூலமோ அறிந்து அவர்களின் அறிவுரைப்படி சிகிச்சையினை மேற்கொண்டு- மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டு உணவு முறையினை மேற்கொள்வது நோயாளிக்கு மிகவும் நல்லது.
கிட்னி பாதிப்பால் உலகில் ஆண்டுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் நமது உடலில் உள்ள உறுப்புகளில் முக்கியமானது சிறுநீரகம். முறையாக கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், நீண்ட நாட்களாக உள்ள சிறுநீரக கல், நாட்பட்ட தொற்று நோய் என பல்வேறு காரணங்களால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.
சிறுநீரகம் முழுவதும் செயலிழந்து விட்டால் வாழ் நாள் முழுவதும் டயாலிஸிஸ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உலக சுகாதார அமைப்பின் ஆய்வின் படி உலகில் ஆண்டுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் சிறுநீரக பாதிப்பால் இறக்கின்றனர்.
இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 52 ஆயிரம் பேர் முழுவதும் கிட்னி செயலிழந்த நிலைக்கு ஆளாகின்றனர். இந்த நோயாளிகளுக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை அல்லது வாழ்நாள் முழுவதும் டயாலிஸிஸ் சிகிச்சை மட்டும் தான் தீர்வு. இந்த நிலைக்கு செல்லாமல் இருக்க சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். உணவில் உப்பின் அளவு கட்டுப்படுத்த வேண்டும். பாஸ்ட் புட் வகை உணவுகளை தவிர்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளில் 29.7 சதவீதம் பேருக்கு கிட்னி பாதிக்கப்படுகிறது. இறக்கின்றனர்.
_______________________________________________________________________________________