PAGE 16

மஞ்சள் 

மஞ்சள், மங்களகரமானது மட்டுமில்ல... சிறப்பான மருந்து, கிருமிநாசினினு பல பெருமைகளைக் கொண்டது. பெண்கள் முகத்துல மஞ்சள் பூசினா... வீடே மங்களகரமா இருக்கறது மட்டுமில்ல, அவங்களோட உடல்நிலையும் நல்லா இருக்கும்.

பொதுவாவே, மஞ்சளை நெருப்புல சுட்டோ... இல்ல, நல்லெண்ணெயில முக்கி நெருப்புல சுட்டோ... புகையை சுவாசிச்சா... மூக்கடைப்பு தொடங்கி, தலைவலி, ஜலதோஷம், தும்மல் எல்லாம் சட்டுனு நின்னுரும்.

ஐம்பது மில்லி பால்ல அதே அளவு தண்ணியை சேர்த்து, உறிச்ச வெள்ளைப்பூண்டு 10 பல் போட்டு, நல்லா வேக வைக்கணும். பூண்டு வெந்து, பால் பாதியா வத்தினதும்... மஞ்சள்தூள், மிளகுத்தூள், பனங்கல்கண்டு சேர்த்து அடுப்பில இருந்து இறக்கணும். சூடு ஆறினதும் பருப்பு கடையுற மத்தால கடைஞ்சி குடிச்சா... நெஞ்சுச்சளி, மூக்குல தண்ணி கொட்டுறதுனு சளித்தொல்லை எல்லாம் சரியாகும்.

சிலருக்கு வயித்துப்போக்கு வந்து பாடாபடுத்தும். இப்போ நான் சொல்லப் போற வைத்தியத்தை அந்த மாதிரி நேரங்கள்ல பயன்படுத்தினா, சட்டுனு குணம் கிடைக்கும். அங்குல அளவுக்கு மஞ்சளை எடுத்து, சின்னச் சின்ன துண்டா நறுக்கி, பாத்திரத்துல போட்டு, மஞ்சள்ல தீப்பொறி பறக்கற அளவுக்கு வறுக்கணும். அதுல ஒரு ஸ்பூன் ஓமத்தைப் போட்டு, அது வெடிக்கற நேரத்துல மூணு வெத்தலையை பிய்ச்சுப் போடணும். பிறகு, ஒரு டம்ளர் தண்ணிய ஊத்தி கொதிக்க வைக்கணும். வடிகட்டின அந்த நீரை குழந்தைகளுக்கு ஒரு பாலாடையும், பெரியவங்களுக்கு கால் டம்ளரும் கொடுத்தா... வயித்துப்போக்கு சரியாகும்.

புண் வந்தா மஞ்சள்பொடியை அதுமேல தூவி, அப்பப்போ சுத்தம் பண்ணிட்டு வந்தா... புண் சரியாகிரும்.

மஞ்சளையும், சந்தனத்தையும் சம அளவு எடுத்து இழைச்சு, உடம்புல பூசிட்டு வந்தா வேர்க்குரு, உடம்புல வர்ற எரிச்சல் எல்லாம் சரியாயிரும். சிலருக்கு பொன்னுக்கு வீங்கினு ஒரு வகை அம்மைநோய் வரும். இதை புட்டாளம்மைனும் சொல்வாங்க. இது பொதுவா சின்னப் பசங்களுக்கு வரக்கூடிய ஒரு நோய். கழுத்து, கன்னம், காதை ஒட்டின இடத்துல வரும். இந்த மாதிரி பிரச்னைகளுக்கு மஞ்சளையும், வேப்பிலையையும் அரைச்சி, தினமும் ஒருவேளைனு மூணு நாளைக்கு பூசிட்டு வந்தா... பொன்னுக்கு வீங்கி சரியாயிரும்.

________________________________________________________________________________

முகம் பளபளப்புடன் திகழ இயற்க்கை மருத்துவம்:- 

தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.

தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ் செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.

ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ் செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும்.

நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றhக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.

கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.

சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.

பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி* எலுமிச்சை *சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.
சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும்.

வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.
தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் *ஆலிவ் ஆயிலைப்* பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

*பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம்,* அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
___________________________________________________________________________________

கொழுப்பை குறைக்கும் உணவுகள்:

1. கொழுப்பை குறைப்பதில் பூண்டுக்கு இணை பூண்டேதான். கொழுப்பில் கொழுப்பு கரையும் என்பது போல பூண்டில் உள்ள கொழுப்பில் நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல கொழுப்பு அதிகமாகும்.

2. இஞ்சி உடம்பின் கெட்ட கொழுப்பை கரைக்க பயன்படுகிறது. உணவில் அதிகமாக இஞ்சியை சேர்க்க வேண்டும்.

3. வெங்காயம், குறிப்பாக சின்ன வெங்காயம்.

4.லவங்க மசாலா பட்டை நமது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதுடன் மொத்த கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

5.சிவப்பு அரிசி, கொழுப்பை குறைக்கிறது.

6. நிலக் கடலை நன்மை செய்யும் கொழுப்பை அதிகரித்து தீமை செய்யும் கொழுப்பை குறைக்கிறது. உணவில் முக்கியமாக கடலை எண்ணையை பயன்படுத்த வேண்டும்.

7. கவளை மீன் எனப்படும் சாலை மீன் நமது உடம்பின் கொழுப்பை குறைப்பதுடன், நமக்கு தேவையான ஒமேகா 3 யை அதிகளவில் கிடைக்கச் செய்கிறது.

8. கருப்பு திராட்சை, கொழுப்புச் சத்தை குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

9. கொள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்பது நமது பழமொழி. கொள்ளு நமது உடம்பின் மிகை கொழுப்பை சமன்படுத்துகிறது.

10. சோயா, கோதுமை போன்ற தாணியங்களும் கொழுப்பை குறைக்கப் பயன்படுகிறது.

சிகரெட் பிடிக்கக்கூடாது. மற்றவர்கள் விடும் சிகரெட் புகையை இலவசமாகப் பிடிப்பதால் இரத்தக் குழாய்களில் நெருக்கடி ஏற்படுகிறது. கெடுதலான கொலாஸ்டிரால் உருவாகாமல் இருக்க ஓட் மீல், பீன்ஸ், பட்டானி, பார்லி அரிசி, ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள் முதலியன உதவும். இவற்றையும் அவ்வப்போது உணவில் சேர்க்கவும். சில தானிய உணவுகளில் கரையத்தக்க நார்ச்சத்தான சிலியம் (Psyllium) என்ற நார்ப்பொருள் இருக்கிறது. எனவே, கம்பு, கேழ்வரகு, சோளம் முதலியவற்றையும் அவ்வப்போது காலைப் பலகாரமாக சேர்க்கவும். இதில் உள்ள நார்ப்பொருள்களும் கொலாஸ்டிராலைக் கரைக்கும்.

சோயாபால் தினமும் அருந்தவும். இல்லை எனில் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சோயாமாவை, உங்களுக்குத் தயாரிக்கப்படும் உணவில் சேர்த்து பலகாரம் செய்யச் சொல்லுங்கள். சோயா தயிரும் பயன்படுத்தலாம்.

கொலாஸ்டிராலைக் குறைத்து HDL என்ற நல்ல கொலாஸ்டிரால் எப்போதும் அளவு குறையாமல் பார்த்துக்கொள்வதில் மீனின் பங்கு மகத்தானது. ஒமேகா-3 என்ற அமிலம் மீனில் கிடைக்கிறது. எனவே ஒருநாள் விட்டு ஒரு நாள் 100 கிராம் மீனையும் உணவில் சேருங்கள். சைவ உணவுக்காரர்கள் மீன் எண்ணெய் கேப்சூல் இரண்டு சாப்பிடலாம்.

தேங்காய் எண்ணெய், பாம்ஆயில் முதலியவற்றில் சமையல் செய்யக்கூடாது.

தினமும் பத்து டம்ளர் தண்ணீர் அருந்தவும். இத்துடன் தனியாவைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு வடிகட்டி அருந்தவும். தினமும் மாதுளம்பழம் சாப்பிடுவது மிக மிக நல்லது. இது கொலாஸ்டிரால் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

உடல் பருமனாவதைத் தடுக்கும் முயற்சியில் கவனத்தைச் செலுத்தினால் எல்லா நோய்களும் குணமாக ஆரம்பித்துவிடும்.
____________________________________________________________________________________