PAGE 19

பொடுகு என்றால் என்ன ?

தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.

பொடுகு ஏன் வருகிறது?

1. வரட்சியான சருமத்தினால் வரும்

2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு உற்பத்தியாகும்.

3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது

4. ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதனாலும் பொடுகு வரும்

5. “பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம்.

6. எக்ஸீமா(Eczema), சொறாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நொய்களாளும் பொடுகு வரலாம்

7. அதிகமாக சாம்பு பயன்படுத்தினாலும் வரலாம். க்ண்ட கண்ட செல்களை தலையில் தேய்ப்பதனாலும் இது வரலாம்.

8. மனஅழுத்தம் கவலையாலும் இது வரலாம்

பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

1. ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையாணை துண்டு போண்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது

2. தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்ததிருக்க வேண்டும்

3. கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்

பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?

1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.

2. சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்.“பிடிரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு டாக்டரை பார்கவும்.

3. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்

4. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.

5. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்

6. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.

7. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது

8. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.

9. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்

10. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்

11. வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்

12. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.

13. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.

14. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.

15. தேங்காய் எண்ணையுடன் வேப்பை என்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.

16. நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.

17. நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாலையை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.

18. தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.

19. பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

20.ஆலிவ் எண்ணெயுடன் இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் பொடுகு குறையும்.
______________________________________________________________________________

கருவளையம் மறைய..!

பெண்களுக்கு அழகான கண்ணைச் சுற்றிலும் திடீரென்று தோன்றும் கருவளையத்தை பார்த்திருக்கிறோம். கண்களுக்கு கீழ் நோக்கினால் இந்த கருவளையத்தைக் கண்டுபிடித்து விடலாம். இதனால் பெண்களுக்கு அந்த கண்களே மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்து விடுகிறது.

அந்த இடத்தில், சுமார் அரை அங்குலம் அகலத்திற்கு லேசான கருப்பு நிறத்தில் வில் போன்ற வளைவாக சருமம் காணப்படும். இது ஒரு பெண்ணின் முக அழகை முற்றிலும் கெடுத்து விடும். இந்த கருவளையம் ஏற்பட பல காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முதல் காரணம், அந்த இடத்தில் தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து காணப்படுவது தான்.

அந்த சுருக்கமே கருப்பு நிறமாக மாறி, கருவளையத்தை ஏற்படுத்தி விடுகிறது. சத்துக்கள் இல்லாத உணவு வகைகளை உண்பது கூட இதற்கு முக்கிய காரணமாக அமையலாம். தோலை வெளுப்படையச் செய்யும் தாது உப்புகளும், புரதமும், கொழுப்புச் சத்தும் உள்ள உணவுப் பொருட்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த கருவளையம் நாளடைவில் மறைந்து விடும்.

கண்களுக்கு மிக அதிக வேலை கொடுத்தாலும் கருவளையம் வரலாம். அதாவது, அதிக நேரம் கண் விழித்து படிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது டி.வி. பார்த்து வந்தாலோ கருவளையம் தோன்றலாம். நீண்டகாலம் உடல்நலக்குறைவாக இருப்பதும், உணவு கட்டுப்பாட்டில் இருப்பதும்கூட இதற்கு மிக முக்கிய காரணமாக அமையலாம். 

சில பெண்கள் என்ன வேலையாக இருந்தாலும் இழுத்துப் போட்டுக் கொண்டு தாங்களே செய்வார்கள். அதிகப்படியான வேலையை தொடர்ந்து செய்யும் போது அதிகப்படியான சோர்வு ஏற்பட்டு, ஏற்பட்டு இக்குறைபாடு வந்துவிடும். ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்களுக்கும் கூட கண்ணில் கருவளையம் வரலாம். 

கருவளையத்தை எப்படி போக்கலாம் என்று பார்க்கலாம்.இதற்காக ரொம்பவும் கஷ்டப்பட வேண்டாம். அன்றாட சமையலில் கொஞ்சம் அக்கறை காட்டினாலே போதுமானது.கண்ணில் உள்ள கருவளையத்தை நீக்க இரும்புச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். 

முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, முள்ளங்கி, சின்ன வெங்காயம், பூண்டு, அவரைக்கீரை, ஆப்பிள், நெல்லிக்காய், விளாம்பழம், நாவல்பழம், கமலா ஆரஞ்சு, வாழைப்பழம், வெள்ளரிப்பழம், பாகற்காய், வாழைத்தண்டு போன்றவற்றில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது. பொன்னாங்கன்னி கீரையில் அதிக சத்து உள்ளது.

இந்த காய்கறிகளை சமையலில் அதிகம் பயன்படுத்தினாலே நாளடைவில் கருவளையத்தின் பாதிப்பில் இருந்து தப்பிவிடலாம். அழகான கண்களுக்கு சொந்தக்காரி ஆகிவிடலாம்.கருவளையம் உள்ளவர்கள், இதுபோக இன்னொரு முறையையும் பின்பற்றலாம். வெற்றிலை போட பயன்படுத்தும் சுண்ணாம்பை ஒரு பட்டாணி அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

அதை ஒரு கப் குளிர்ந்த நீரில் கரைத்து சுமார் ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். அந்த சுண்ணாம்பு நீரானது தெளிந்தவுடன், அதில் இருந்து 2 ஸ்பூன் தெளிந்த தண்ணீரை வேறொரு கிண்ணத்தில் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள். பிரித்தெடுத்த தண்ணீரின் சிறிது எலுமிச்சைச் சாறும் பிழிந்து வடிகட்டிக் கொள்ளுங்கள்.

தொடர்ந்து, இரண்டையும் ஒன்றாக கலந்து, அதை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கண்ணை சுற்றி பூசுங்கள்.கண்விழியில் பட்டுவிடக் கூடாது.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் கண் கருவளையம் மறைந்து விடும்.
_______________________________________________________________________________


ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவு வகைகள்

உடல் ஆரோக்கியமானது ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளன. ஏனெனில் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கு ரத்தமா னது மிகவும் இன்றியமையா தது. எனவே அத்தகைய ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால், உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடலின் உறுப்புக்கள் மெதுவாக பாதிக்கப்படும்.

இவ்வாறு அதிகப்படியான நச்சுக்கள் ரத்தத்தில் இருந்தால் தான், அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, தொடர்ச்சியான தலை வலி, சோர்வு போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி, அசுத்த ரத்தமானது உடலில் இருந் தால், உடலில் மட்டுமின்றி, சருமத்திலும் பல பிரச்சனைகள் ஏற்படும்.

அதில் பிம்பிள், முகப்பரு, கருமைப்படிதல், பொலிவிழந்த சருமம் மற்றும் வறட்சியான சருமம் போன்றவை ஏற்படும். எனவே தான், கடைகளில் ரத்தத்தை சுத்திகரிக்கும் பல்வேறு மருந்துகள் உள்ளன. ஆனால் இந்த மருந்துகளால் எந்த நன்மையும் கிடைப்பதில்லை.

ஆகவே ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, ரத்தத்தை சுத்தப் படுத்தும் உணவுகளை சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, உடலில் ரத்தத்தை சுத்திகரிக்கும் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நிணநீர் நாளங்கள் நன்கு செயல்பட்டு, ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலில் ரத்தத்தை சீராக ஓட வைக்கும்.

இங்கு ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவு களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றை உணவில் சேர்த்து வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, சருமமும் நன்கு அழகாக மின்னும்.

ப்ராக்கோலி :

இந்த பச்சை நிற காய்கறியில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இவை ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு, உடலில் ஆபத்தை விளைவிக்கும் கொடிய நச்சுக்களை வெளியேற்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

முட்டைகோஸ் :

வாரம் 2-3 முறை ஒரு டம்ளர் முட்டைகோஸ் ஜுஸை குடித்து வந்தால், உடலில் உள்ள ரத்தமானது சுத்தமாகும்.

காலிஃப்ளவர் :

பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான காலிஃப்ளவரில் குளோரோஃபில் என்னும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே இந்த உணவுப்பொருளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பாகற்காய் :

கசப்புத் தன்மையுடைய பாகற்காய் அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். அதிலும், பாகற்காயை வேக வைத்து சாப்பிட்டால் தான், அதன் முழு நன்மையைப் பெற முடியும்.

வேப்பிலை :

வாரத்திற்கு 2 முறை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் மட்டுமின்றி, கிருமிகளும் அழிந்துவிடும்.

பூண்டு :

பூண்டு ஒரு சிறந்த ஆன்டிபயாடிக் மட்டுமின்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மையும் கொண்டது. மேலும் இது உடலில் தங்கியுள்ள நச்சுகளை மட்டுமின்றி, தேவையற்ற கொழுப்புக்களையும் கரைத்து விடும்.

கேரட் :

கேரட் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும் என்று சொல்வார்களே, அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் கேரட் சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும் என்பதால் தான். ஆகவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜுஸ் குடித்து, ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருங்கள்.

எலுமிச்சை :

எலுமிச்சையில் உள்ள புளிப்புத்தன்மை ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் உள்ள அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். மேலும் இது உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

அன்னாசி :

பழங்களில் அன்னாசிப் பழம் ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. ஆகவே அன்னாசியை டயட்டில் சேர்த்து, ரத்தத்தை மட்டுமின்றி, சிறுநீரகத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இஞ்சி டீ :

இஞ்சி டீயை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தாலும், ரத்தம் சுத்தமாக இருக்கும்.

பார்ஸ்லி :

சிறுநீரகத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுத்தப்படுத்தும் தன்மை பார்ஸ்லியில் அதிகம் உள்ளது. மேலும் இது ரத்தத்தை சுத்தப்படுத்தும் வைத்தியங்களில் மிகவும் பிரபலமான பொருளும் கூட.

நெல்லிக்காய் :

நெல்லிக்காயிலும் ரத்தத்தை சுத்திகரிக்கும் பொருள் அதிகம் நிரம்பியுள்ளது. ஆகவே தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு, ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, நோயெதிர்ப்பு சக்தி யையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.

நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புக்களையும் எந்தவித தங்கு தடையின்றி இயங்க செய்வதில் ரத்தத்தின் பங்கு முக்கியமானது. சீரான ரத்த உள்ள மனிதனுக்கு ஆயுள் கெட்டி என்பார்கள்.

அந்த வகையில் உடலுக்கு ஒவ்வாத உணவு பண்டங்களை தவிர்த்து மேற்கூறிய உணவு பொருட்களை உண்டு ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, பிறருக்கு தானமாக கொடுக்கும் ரத்தத்தையும் சுகாதாரமானதாக கொடுப்போ ம்.
_______________________________________________________________________________

கொலஸ்ட்ராலை கரைக்க உதவும் உணவு வகைகள்..! CHOLESTEROL

இளம் வயதில் சாப்பிடும் கொழுப்புக்கள் உடலில் அப்படியே தங்கி, அதனால் உடல் பருமன் அடைவதோடு, இதய நோய்க்கும் ஆளாகின்றனர். ஏனெனில் அவ்வாறு தங்கும் கெட்ட கொழுப்புக்கள் இரத்தக்குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன.

அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் நன்கு செயல்படும்.

அவகேடோ
அவகேடோவில் கொழுப்புக்கள் அதிகமாக இருப்பதால், இது இதயத்திற்கு மிகவும் ஆபத்தான உணவுப் பொருள் என்று தான் நினைத்திருக்கிறோம். ஆனால் உண்மையில், அவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் தன்மைக் கொண்டது.

மார்கரைன்
இது வெண்ணைக்கு நல்ல மாற்றாக இருந்தாலும், இதில் ஸ்டெரால்ஸ் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பொருள் அதிகம் உள்ளது.

மிளகாய்
மிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லாவிட்டாலும், இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டவை.

பீன்ஸ்
அனைத்து காய்கறிகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இருப்பினும் பீன்ஸில் நார்ச்சத்துடன், அதிக அளவில் ஸ்டார்ச் இருப்பதால், இதனை தண்ணீரில் வேக வைத்து, அந்த நீரை வடிகட்டிவிட்டு சாப்பிட்டால் நல்லது. இல்லாவிட்டால், பீன்ஸானது கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.

சாக்லெட்
சாக்லெட் அல்லது கொக்கோ கலந்து உணவுப் பொருட்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை கரைத்து, தமனிகளில் ஏற்படும் அடைப்புக்களை தடுக்கிறது.

ரெட் ஒயின்
ரெட் ஒயினானது அதிகப்படியாக நார்ச்சத்து நிறைந்த திராட்சைகளால் செய்யப்படுவதால், இதனை உட்கொண்டால், இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதனால் தான் ரெட் ஒயினை அளவாக சாப்பிட்டால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.

வெண்டைக்காய்
வெண்டைக்காய் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

பூண்டு
பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும்.

சோயா பொருட்கள்
சோயா பொருட்களிலும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் தன்மை இயற்கையாகவே உள்ளது.

பசலைக் கீரை
பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே பசலைக் கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.